கவிஞர் மு.முருகேசிற்குப் பரிசு03 ;nighazh)murukesu_parisu03

கவிஞர் மு.முருகேசு எழுதிய சிறுகதை நூலுக்குக்

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பரிசு

    வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘இருளில் மறையும் நிழல்’ சிறுகதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுகதை நூலுக்கான இரண்டாம் பரிசினை வழங்கியது.

  கடந்த 37 ஆண்டுகளாகக் கம்பத்தில் இயங்கிவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ஆண்டுதோறும்  விடுதலைத் திருநாளன்று  நடைபெறும் இந்தப் பரிசளிப்பு விழாவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் திறந்தவெளி  ஊர்தியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, மாக்கவி பாரதி வேடமணிந்த மாணவர் ஒருவர், ‘பாரதி’ தலைப்பாகையை எழுத்தாளருக்குச் சூட்ட, பிறகு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும்.

ஆகத்து 15-ஆம்  நாள்,  70–ஆம் ஆண்டு இந்திய  விடுதலைத் திருநாளையொட்டிநடைபெற்ற ஐம்பெரும் விழாவில், 2015-ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான போட்டியில் கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘இருளில் மறையும் நிழல்’ சிறுகதை நூலுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

 பாரதி இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் பாரதன் முன்னிலையில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும் கவிஞர் மு.முருகேசுக்கு வழங்கினார்.

  இவ்விழாவில், திருச்சி ‘இனிய நந்தவனம்’ ஆசிரியர் கவிஞர் சந்திர சேகரன், சேலம் வாசகன் பதிப்பக உரிமையாளர் கவிஞர் ஏகலைவன் ஆகியோரும் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர்.

கவிஞர் மு.முருகேசிற்குப் பரிசு01 ; nighazh)murukesu_parisu01 கவிஞர் மு.முருகேசிற்குப் பரிசு02 ; nighazh)murukesu_parisu02 கவிஞர் மு.முருகேசிற்குப் பரிசு04 ; nighazh)murukesu_parisu04