முத்திரை-வானம்பாடிக்கவிஞர்சங்கம் : muthirai_vaanambaadisangamthalaippu_kuralsollungal

குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்!

  வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட  ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர்  தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்!  தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குறளை அவரின் வழித்தோன்றல்களான நாம்  மேன்மேலும் புகழ்பெறச் செய்வோம்.

 போட்டிக்கான பிரிவுகள்:

அ –  இளமழலை முதல் வளர்மழலை வரை : முதல் 20 குறள்கள்

ஆ – முதல் வகுப்பு முதல் ஐந்து வரை : முதல் 50 குறள்கள்

இ- ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டு வரை : 100 குறள்கள்

(அ) அறத்துப்பால் பகுதியில் 5 அதிகாரம்

(ஆ) பொருட்பால் பகுதியில் 5 அதிகாரம்

 பதிவிற்கான விவரம்:

 பெற்றோர்களே! 2016 செத்தம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டியில் உங்களின் செல்லக்குழந்தைகள் கலந்துகொள்ள வரும்   ஆனி 31 / சூலை 15  ஆம் நாளுக்குள் கீழ்வரும் தொலைபேசியில் உங்கள் செல்லக்குழந்தைகளின் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

(குறிப்பு : குறள் மட்டும் ஒப்புவித்தால் போதும், குறள் சொல்லும் அழகு, நேரம், உடல்மொழி ஆகியவற்றைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும்.)

குறளின் வளமை காண, வள்ளுவனின் பெருமை காண, குவைத்து வாழ் தமிழ் உறவுகளே! செப்டம்பர் வரை காத்திருங்கள்!

 வணக்கம்

செங்கை நிலவன்

பொதுச் செயலாளர்

‪#‎வளைகுடா_வானம்பாடிக்கவிஞர் சங்கம்,. குவைத்து

 பகிரித் தொடர்புக்கு:

திரு. செம்பொன்மாரி கா.சேது – 97801299

திருமதி. விசயப்பிரியாஇரமணன் – +91 9790213427

திரு. தஞ்சை முருகானந்தம் – 66731628

திரு. சிவசங்கரன் – 69301871