சிறுகதைப் போட்டி – (உ)ரூபன் & யாழ்பாவாணன்
(உ)ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும்
உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு
அழைக்கிறோம்…
வாருங்கள்… வாருங்கள்…
சிறுகதைகள் அளிக்க வேண்டிய
இறுதி நாள் தை 17, 2046 / 31.01.2015
போட்டியின் நெறி முறைகள்:
1. கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பைத் தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
2. 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
3. போட்டிக்கான சிறுகதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களைத் தறவேற்றம் செய்யலாம்.
4. மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இறுதி நாளின் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) சிறுகதை அளிக்க வேண்டும்.
5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
6. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.
7. கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல், வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும
8. பொதிவாவண(PDF) வடிவில் சிறுகதைகளை அனுப்பவேண்டாம்.ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
9. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(words) கோப்பாக அனுப்பலாம்
10.போட்டிக்கான சிறுகதை அனுப்பவேண்டிய
மின்னஞ்சல் முகவரி : ramask614@gmail.com
நடுவர்கள்:
1. கவிஞர்.திரு இ.ரமணி(ஐயா)- இந்தியா
2. வலைச்சித்தர்.திரு.திண்டுக்கல் தனபாலன்- இந்தியா
3. திரு.க.புவேனேந்திரன்- பிரான்சு
(பட்டதாரி ஆசிரியர் தமிழ்த்துறை)
நிருவாகக்குழு:
1.திரு.கில்லர்-அபுதாபி
2.திரு.பாண்டியன்-இந்தியா
3.திரு.இராசமுகுந்தன்-கனடா
4.திருமதி-அ.இனியா-கனடா
5.திரு.கா.யாழ்பாவணன்-இலங்கை
6.திரு.த. (உ)ரூபன்-மலேசியா.
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு (பதக்கமும் சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்),
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர்வாரீர் என்று வரவேற்கிறோம்…! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது கீழ்க்குறிப்பிடும் மின்னஞ்சல்முகவரிகளில்தொடர்புகொள்ளுங்கள்…கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல், வலைத்தளமுகவரி அகியவற்றைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்:rupanvani@yahoo.com
நன்றி
அன்புடன்
(உ)ரூபன்
யாழ்பாவாணன்
கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பைத் தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். // தலைப்புகளை எங்கே கொடுத்திருக்கிறீர்கள்?
முதல் தொடருக்குரிய விவரத்தை நானும் தேடிப் பார்த்தேன். கிட்டவில்லை. நாமே தேர்வு செய்து கொள்ளும் தலைப்பைத்தான் கூறுகிறார்களோ என்றும் நினைத்தேன். ஆர்வலர்கள் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு விவரம்அறியட்டும் என்றுதான் பதிந்துள்ளேன்.
தொடர்பு கொண்டு எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அன்புடன் ஆசிரியர்
ஐயா! http://2008rupan.wordpress.com/2015/01/01/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/#comment-1861 எனும் முகவரியில் இந்தப் போட்டிக்கான தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.