சென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்
புரட்டாசி 02, 2046 /19-09-2015
மாலை 05.00
தாகூர் திரைப்பட மையம்
இராசா அண்ணாமலைபுரம்
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20 புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம்.
இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140 பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. இராபர்ட்டு புரூசு பூட்டு என்ற ஆராய்ச்சியாளர் 1864- இல் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். அதன்பின் 1930 -60 வரை இந்தியத் தொல்லியல்துறையைச் சேர்ந்த கிருட்டிணசாமியும் , 1962இல் கே.டி.பானர்சியும் , 1976இல் ஏ. சுவாமியும், 2003இல் துளசிராமனும், 2011இல் சாந்தி பப்பும் எனப் பலர் ஆய்வு ஆய்வு செய்துள்ளனர் . இவர்களின் ஆராய்ச்சிபடி தமிழ்நாட்டின் தொல்லியல் தன்மையை இந்த குடியம் குகைகள்தான் சிறப்பிக்கின்றன.
2011இல் ஆய்வு செய்த பப்பு இந்தக் கற்பாறைகளின் பகுதிகளை பிரான்சிற்கு அனுப்பி நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்தப் பாறைகள் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ 13 கோடி ஆண்டு களுக்கு முன்பிருந்த மலைகள் தொடர்ச்சியான வெயில், மழையினால் பல்வேறு நிலைகளை அடைந்து படிவுப்பாறைகளாக மாறியுள்ளன. இந்தப் பாறைகளைப் பயன்படுத்தி வேட்டையாட தேவையான கூர்மையான கற்கருவிகளை மனிதன் கண்டறிந்தான்.
“உணவுக்குத் தேவையான காடுகள், நீராதாரமாக ஆறு, வசிக்கக் குகைகள் இருந்தால்போதும் அக்காலத்திய மனிதனுக்கு. இந்த அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இந்தப் பகுதியில் இருந்துள்ளன என்பதால் பழைய கற்கால மனிதன் வாழ்ந்தபகுதி இது” எனச் சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். 2012இல் துளசிராமன் என்பவரும் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
http://www.vikatan.com/news/article.php?aid=48033
https://www.facebook.com/events/753775994745616/
http://www.rameshyanthra.com/?page_id=1015
http://www.rameshyanthra.com/?page_id=1385
https://www.facebook.com/ramesh.yanthra
கான்சு சென்ற குடியம் குகையின் கதை
இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் குடியம் குகைகள் குறித்த ஆவணப்படம் கான்சு பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறித்து அதன் இயக்குநர் இரமேசு யந்திரா (பிபிசி) தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வி.
http://www.bbc.com/tamil/india/2015/05/150525_gudiyamcaves?SThisFB&fb_ref=Default
http://www.techgoss.com/Story/653S11-Techie-s-documentary-Success.aspx
http://www.thehindu.com/features/metroplus/the-caves-go-to-cannes/article7007505.ece
– முத்தமிழ் வேந்தன்
Leave a Reply