சங்கே முழங்கு – பாவலர் கருமலைத்தமிழாழன்

  சங்கே  முழங்கு !   வரிகளிலே முருகனையே முதலில் பாடி வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப் பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப் பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர் அரிதான பாரதியின் தாச னாகி அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால் ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !   சாட்டையிலே சொற்களினை வீசி மூடச் சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம் வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம் கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக் கூட்டிவந்தே…

சென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்

புரட்டாசி 02, 2046 /19-09-2015  மாலை 05.00 தாகூர் திரைப்பட மையம் இராசா அண்ணாமலைபுரம்   திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20  புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள்   2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140  பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. …

நரேந்திர மோடி தலைமையாளரானால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது-தொல்.திருமாவளவன்

  திருவள்ளூர்(தனி) நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாசூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில்  தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு சிறப்பான சனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நரேந்திரமோடி தலைமையாளரானால் -பிரதமரானால்- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு…

மத்தியில் நல்ல பிரதமரைத் தேர்ந்து எடுக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

  திருவள்ளூர் தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்  இரவிக்குமாரை ஆதரித்து, ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த கூட்டத்திற்கு வர இயலாத நிலைமையில், உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்த என்னை, நம்முடைய தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட நிருவாகிகளும் வந்து சந்தித்து இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். உடல் நலிவு எனக்கு மட்டும் அல்ல, தமிழ்நாடே இன்று நலிவுற்று இருக்கிறது. அதை நீக்க அனைவரும் ஒன்று படும் நேரத்தில், நான் வீட்டில்…