சென்னை விமானநிலையத்தில்

நக்கீரன் கோபால் கைது!

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன்  புலனாய்வு இதழாசிரியரும், மூத்த இதழளருமான  நக்கீரன் கோபால் எந்த ஆவணங்களும் இன்றிக் காவல் துறையினரால் தளையிடப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த  முறையீட்டின் அடிப்படையில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என நக்கீரன் இதழ் கூறுகிறது.

நக்கீரன் இதழில் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து  முறையீடு அளித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

முதலில் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  உசாவுவதாகக் கூறப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்ட  நிலையில், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து  அவரிடம் காவல்அதிகாரிகள் உசாவல் மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது எனப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டப்பிரிவு 124- அ இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இச்சட்டப்பிரிவு பொருந்துவதாக இல்லை.  எனினும் உசாவல் முடிந்தபின்னரே சட்டப்பிரிவுகளை முடிவெடுப்பர்.

  நாடெங்கும் இதழாளர்கள் சிறையிலடைக்கப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும்.