செயல் அலுவலரின் ஊழலாட்டங்கள்!
திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் தங்கையன்.
இவர் ஒத்துழைப்பால் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், 18 அகவைக்கும் குறைவான இரியாசு என்ற வேட்பாளர் 11 ஆவது தொகுதிக்காகத் தேர்தலில் நின்றுள்ளார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டார். இவரை எதிர்த்து நின்ற இசட் 719. கூட்டுறவு வங்கித்தலைவர் சையது இபுராகிம் மனைவியின் உடன்பிறப்பு சியாவுதீன் அதிமுக வேட்பாளராக நின்று தோல்வியுற்றார். தற்பொழுது துணைத்தலைவராக இருக்கும் சுல்தான் மதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்பொழுது தோல்வியடைந்த வேட்பாளர்கள், 18 அகவைக்கும் குறைவாக உள்ள இரியாசு வெற்றி பெற்றது செல்லாது எனக்கூறிப் பதவிவிலக வைத்துள்ளார்கள்.
சையது இபுராகிம், சுல்தான் ஆகியோர் தூண்டுதலின் பேரில் இரியாசு தேர்தலில் நிற்கக் காரணமாக இருந்த செயல் அலுவலர் தங்கையன் பணிமாற்றம் செய்யப்பட்டார். அந்த பித்தலாட்டத் தங்கையன்தான் தற்பொழுது சுல்தான், சையது இபுராகிமுடன் கூட்டுசேர்ந்து மறுபடியும் திட்டச்சேரி வந்து பேரூராட்சிக்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்து வருகிறார்.
தங்கையன் செயல்அலுவலராக இருந்தபோது திட்டச்சேரி பேரூராட்சியில் போலி ஆவணங்கள் உருவாக்கிப் பல இலட்சங்களை மோசடி செய்துள்ளார். இத்தனை புகார்களையும் பற்றிக் கூறி விளக்கம் கேட்க எடுத்து செயல் அலுவலரிடம் 9443448044 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோம். “என்னுடைய உறவினர் அமைச்சராக உள்ளார்” என்றும் “தற்பொழுது வேலைாயக உள்ளேன்” என்றும் கூறி இணைப்பைத் துண்டித்துக்கொண்டார்.
எனவே பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் திட்டச்சேரி பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல்களைக் கண்டறிந்து செயல் அலுவலர் மீது துறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
Leave a Reply