பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 தொடர்ச்சி)   பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6 ‘கல்வி’ க்கான விளக்கம் ‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று…

மின் விளக்கைத் தாமசு எடிசனும், ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர் – விசயகாந்து தாக்கு

மின் விளக்கைத் தாமசு எடிசனும், ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர் – விசயகாந்து தாக்கு பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஊழலைக் கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் மாபெரும் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு திருச்சியில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டில் பேசிய விசயகாந்து, ”தமிழக முதல்வர் செயலலிதா, மக்களைத் தமது குழந்தைகள் என்கிறார். அப்படியென்றால் தமது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டியதுதானே! மின்…

தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி

தாமரையின் ஊழல் இதழ்கள் !  – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…

ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீண்டும் பணியாற்றும் கொடுமை!

  தேவதானப்பட்டிப் பகுதியில் ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் முன்பே, மீண்டும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சட்ட முரணான நடைமுறை உள்ளது.   தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை எனப் பல அலுவலகங்களில் தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்கவேண்டும் எனச் சிலர் இடைத்தரகர்கள் மூலம் கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துத் தங்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துக் கையூட்டு கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய தொழிற்சாலை உரிமம், நிலுவைத்தொகை,…

திட்டச்சேரியில் தில்லு முல்லு தேர்தல் – கமுக்க முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுப்பு

பள்ளிவாசல் தோறும் தேர்தல் முறைகேடுகள்! பொதுச்சொத்து கொள்ளை!     நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் கி.பி.1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் 1923 வக்பு நிருவாகச் சபையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் அப்பள்ளிவாசலில் உள்ள சொத்துக்களைப் பேணவும் பள்ளிவாசலில் உள்ள ஊழியர்களுக்குச் சம்பளம், பிற செலவிற்காக வக்பு சொத்துக்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.   இவ்வாறு தொடங்கப்பட்ட குழுவிற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் இரண்டு பிரிவினர்களாகச் செயல்பட்டுத்…

செயல் அலுவலரின் ஊழலாட்டங்கள்!

  திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் தங்கையன்.   இவர் ஒத்துழைப்பால் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், 18 அகவைக்கும் குறைவான   இரியாசு என்ற வேட்பாளர் 11 ஆவது தொகுதிக்காகத் தேர்தலில் நின்றுள்ளார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டார். இவரை எதிர்த்து நின்ற இசட் 719. கூட்டுறவு வங்கித்தலைவர் சையது இபுராகிம் மனைவியின் உடன்பிறப்பு சியாவுதீன் அதிமுக வேட்பாளராக நின்று தோல்வியுற்றார். தற்பொழுது துணைத்தலைவராக இருக்கும் சுல்தான் மதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்பொழுது தோல்வியடைந்த வேட்பாளர்கள்,   18 அகவைக்கும்…

முடித்த பணியைப் புதுப்பணியாகக் காட்டும் பொதுப்பணித்துறையின் ஊழல்!

தேவதானப்பட்டிப் பகுதிகளில் நடைபெற்ற பணியினை மீண்டும் மீண்டும் செய்து அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பொதுப்பணித்துறை!     தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கண்மாய் ஏற்கெனவே குளத்தில் உள்ள கரைகளை மேம்படுத்திச் சீராக வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அப்பகுதியில் உள்ள உழவர்கள் பயனடைந்து வருகின்றனர்.இப்பொழுது பொதுப்பணித்துறை, ஏற்கெனவே செய்த வேலையை மீண்டும் உடைப்பு இயந்திரம் கொண்டு கரையை உயர்த்துகின்ற பணியினை செய்து வருகிறது. இதே போல செங்குளத்துப்பட்டி கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் பணி நடைபெற்றது. அப்போது…

ஊராட்சி ஊழல்கள்! தொடர் நடவடிக்கை தேவை!

குள்ளப்புரம் ஊராட்சியில் பலஇலட்சம் மோசடி! ஊராட்சிச் செயலாளர் பணியிடைவிலக்கம் ஊழலுக்குத் தண்டனை பணியிடைவிலக்கம் மட்டும்தானா?   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் பல இலட்சம் உரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. குள்ளப்புரம் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் சோதியம்மாள். இவர் இரண்டாவது முறையாக ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரியகுளம் ஒன்றியத்திலேயே அதிக வருமானம் உள்ள ஊராட்சி குள்ளப்புரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராகப் பணிபுரிந்த முத்துவேலன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட ஆட்சியரகத்திற்கு மாற்றப்பட்டார்.   அதன்பின்னர் ஊராட்சிச் செயலாளராக அ.வாடிப்பட்டி ஊராட்சிச் செயலாளர்…

என்று மடியும் இந்தக் கையூட்டு வேட்கை? – வைகை அனிசு

ஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள்  “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது   வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம்  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது….

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மடல் : 2 முறையீடு

விடுநர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,அகரமுதல இணைய இதழ் 23 எச்., ஓட்டேரிச்சாலை, சென்னை 600 091 பேசி 9884481652 ; 044 2242 1759 மின்வரி : madal@akaramuthala.in பெறுநர் தலைமைத் தேர்தல் ஆணையர், பொது(தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 மின்வரி :ceo@tn.gov.in நாள் 21.04.2045 / 04.05.2014 மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு  பொருள்: வாக்காளர் பட்டியலை முழுமையாக்கலும் வாக்குகளை விலைபேசுவோரைத் தண்டித்தலும் வணக்கம்.    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு நீங்கேள பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால்…