ம.ந.கூட்டணிமாநாடு,திருச்சி02 :manakuttanimaanadu02

மின் விளக்கைத் தாமசு எடிசனும்,

ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர்

– விசயகாந்து தாக்கு

பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஊழலைக் கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் மாபெரும் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு திருச்சியில் புதனன்று நடைபெற்றது.

மாநாட்டில் பேசிய விசயகாந்து, ”தமிழக முதல்வர் செயலலிதா, மக்களைத் தமது குழந்தைகள் என்கிறார். அப்படியென்றால் தமது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டியதுதானே!

மின் விளக்கைக் கண்டுபிடித்தவர் தாமசு ஆல்வா எடிசன். ஊழலைக் கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தனக்குத்தானே கசகசவென பாராட்டுவிழாக்களை நடத்திக்கொள்வார். தமிழகச் சட்டமன்றத்தைத் தனக்கான பாராட்டு மன்றமாக மாற்றியவர் செயலலிதா.

திமுகவில் கே.என்.நேரு, பொன்முடி போன்றவர்களும், அதிமுகவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களும் குறுநில மன்னர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி வெற்றிபெற்று ஊழலை ஒழிக்கும். நேர்மையான நிரூவாகத்தை நடத்தும். குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். தமிழகத்தில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தும்  திண்காரை வீடுகளாக மாற்றப்படும். மனையுரிமை(பட்டா) கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு  மனையுரிமை வழங்குவோம். மூடப்பட்ட அரசுப் பள்ளிகளைத் திறப்போம். அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்படும்.

 தாசுமாக்கு எனப்படும் அரசு மதுக் கடைகள் மூடப்படும். 100 நாள் வேலை 150 நாளாக அதிகரிக்கப்படும். அதில் வழங்கப்படும் ஊதியமும் அதிகரிக்கப்படும்.  வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

 நன்றி : வெப்துனியா