தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க

முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம்

  வணக்கம். கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தும் போராட்டம் மதுரை, சென்னையை மையப்படுத்தி நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்திச் சென்னையில் கைதாகிச் சிறை சென்றதும், இடை நீக்கம் செய்யப்பட்டதும் நாம் அறிந்தனவே!

  பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் 2015இல் தொடங்கப்பட்டு மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு வெள்ளையன் அவர்கள் பங்கெடுத்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

  2016 சனவரி 1 அன்று மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் மதுரையில் முழு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் உட்பட பல்வேறு இயக்கத் தலைவர்கள் கைதாகினர்.

  வருகிற மாசி 27, 20418 / 11-3-2017 அன்று மதுரை, காளவாசல் திரு.வி.க சதுக்கத்தில்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் சார்பில்

முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தாங்கள் தங்கள் அமைப்பினரோடு திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். நன்றி!

 

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் சார்பாக 

அழைப்பது தோழமையுள்ள, 

மீ. த. பாண்டியன், 

பேச: 9443184051