தமிழ்ப் பேராய விருதுகள் 2015
சிறந்த தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தி.இரா.நி.(எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராய விருதுகள் நான்காவது ஆண்டாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதை ‘ஒரு சிறு இசை’ நூலுக்காக வண்ணதாசன் பெறுகிறார்.
பாரதியார் கவிதை விருது கவிஞர் இன்குலாபுக்குக் ‘காந்தள் நாட்கள்’ நூலுக்காக வழங்கப்படுகிறது.
‘சோஃபியின் உலகம்’ நூலுக்காக ஆர்.சிவக்குமார், சி.யூ.போப்பு மொழிப்பெயர்ப்பு விருதைப் பெறுகிறார்.
‘நெட்வொர்க் தொழில்நுட்பம்’ நூலுக்காக பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மு.சிவலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது.
ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது ‘ஓவியம் – கூறுகளும் கொள்கைகளும்’ நூலுக்காக ஓவியர் ச.புகழேந்திக்கு வழங்கப்படுகிறது.
சகோ.மார்கிரெட் பாசுடின், ‘இன்னிசைச் சிலம்பு’ நூலுக்காக முத்துத்தாண்டவர் தமிழிசை விருதைப் பெறுகிறார்.
இளம் ஆய்வறிஞருக்கான வளர்தமிழ் விருதைத் ‘தமிழில் விலாச நூலுக்காக’ அ.மோகனா பெறுகிறார்.
சிரீதரன் கதைகளுக்காக அதன் ஆசிரியர் சிரீதரன் ‘விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதைப்’ பெறுகிறார்.
சிறந்த தமிழறிஞருக்கான பரிதிமாற்கலைஞர் விருது, கு.வெ. பாலசுப்ரமணியனுக்கு வழங்கப்படுகிறது.
அ.அ.மணவாளனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது வழங்கப்படுகிறது.
Leave a Reply