dog feeding goat01
விழுப்புரம்:
விழுப்புரம் நகர அ.தி.மு.க., முன்னாள் செயலாளர் நூர்முகமது(55). இவர், நாய், ஆடுகள், வான் கோழிகள்  முதலியவற்றை வளர்த்து வருகிறார். இவற்றில் ஓர் ஆடு கடந்த  மாதம்,  மூன்று குட்டிகளை ஈன்றது.  தாய் ஆடு பால் கொடுக்கும் பொழுது என்ன காரணத்தாலோ ஒரு குட்டியை ஒதுக்கியது. இதனைப்பார்த்துக் கொண்டிருந்த  நாய் ஒன்று தன் குட்டிகளுடன் சேர்த்து ஆட்டுக்குட்டிக்கும்பால் கொடுத்து வருகிறது.

தாய்மை  உணர்வு மிகுந்த நாய் அப் பகுதி மக்களுக்கு விந்தை உயிராகக் காட்சி அளித்து வருகிறது.