காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 3

(ஆடி 31, 2046 / ஆக.16, 2016 தொடர்ச்சி) 3  கடந்த காலங்களில் ஊருக்கு ஊர் மேய்க்கால், புறம்போக்கு என்று தனியாக நிலமிருக்கும். அது ஊருக்குப் பொதுவானது. அதில் ஆடு, மாடுகளை மேய்த்திருப்பார்கள். அது மாதிரியான நிலங்களை இப்பொழுது பலரும் கவர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஊர் நாட்டில் மேய்க்க முடியாது. காட்டிலும் மேய்க்கத் தடை. இப்படியே இருந்தால் கடலிலும் சந்திரமண்டத்திலத்திலேயும்தான் ஆடுகளை மேய்க்க முடியும். இதன் தொடர்பாகப் பலமுறை மத்திய, மாநில மந்திரிகளிடம் நேரிடையாக மனுக்கொடுத்துள்ளோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.  இதன் தொடர்பாகத்…

தாய்ஆடு ஒதுக்கிய குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்!

விழுப்புரம்: விழுப்புரம் நகர அ.தி.மு.க., முன்னாள் செயலாளர் நூர்முகமது(55). இவர், நாய், ஆடுகள், வான் கோழிகள்  முதலியவற்றை வளர்த்து வருகிறார். இவற்றில் ஓர் ஆடு கடந்த  மாதம்,  மூன்று குட்டிகளை ஈன்றது.  தாய் ஆடு பால் கொடுக்கும் பொழுது என்ன காரணத்தாலோ ஒரு குட்டியை ஒதுக்கியது. இதனைப்பார்த்துக் கொண்டிருந்த  நாய் ஒன்று தன் குட்டிகளுடன் சேர்த்து ஆட்டுக்குட்டிக்கும்பால் கொடுத்து வருகிறது. தாய்மை  உணர்வு மிகுந்த நாய் அப் பகுதி மக்களுக்கு விந்தை உயிராகக் காட்சி அளித்து வருகிறது.