திருவரங்கம் வாக்காளர்களை ‘மக்கள் நல்வாழ்வு இணையம்’ அழைக்கிறது
நேர்மையும் நாட்டுப்பற்றும் மிக்க நண்பர்களே!
வணக்கம்
இந்திய/தமிழக அரசியலில் நேர்மைக்கு இடமளிக்க வேண்டிய தருணமிது .இதில் நாம் தவறுவோமானால் எதிர் காலப் பரம்பரையினர்க்கு நேர்மை என்ற சொல்லே தெரியாமல் அழிந்துவிடும் .நமது இன்றைய அரசியல்வாதிகள் வெள்ளைக்காரர்களே வெட்கப்படும்படி எந்த அளவுக்கு நாட்டைச் சுரண்டி வருகிறார்கள் என்பதை நாடே அறியும் . அவர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டியது இரண்டாவது விடுதலைப்போராட்டத்துக்கு ஒப்பானது .இதற்கு ஒரு காந்தி பிறக்க மாட்டார்;- நாம் தான் செய்யவேண்டும்.
இதை உணர்ந்த ஊழலை எதிர்க்கும் நேர்மையாளர்களின் கூட்டமைப்பு ஒன்று திசம்பர் 2013இல் ‘மக்கள் நல்வாழ்வு இணையம் ‘என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கிக் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 11 வேட்பாளர்களை (லோக் சத்தா மற்றும் தனியர்) முன்னிறுத்தி சுமார் 55000 வாக்குகளை மொத்தமாகப் பெற்றது. பெரியவர்களும் , ஆர்வலர்களும் இந்த முயற்சியைப் பாராட்டினார்கள். திருவரங்கம் இடைத்தேர்தலில் விவசாயிகள் சங்கத்தைச்சேர்ந்த ஊழல் எதிப்பாளர் திரு எல்.கதிரேசன் அவர்களை (தேங்காய் சின்னம்) ஆதரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இந்தப் பின்னணியில் 2015 பிப்பிரவரி 4இல் நடந்த கூட்டமொன்றில் இந்த முயற்சியைத் தொடர்வதென்றும் வரும் 2016 சட்ட மன்றத்தேர்தலில் போட்டியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது .
ஆர்வமுள்ள நேர்மையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் .
தொடர்புக்கு:-
எசு.எம்..அரசு (9382896066)
சி.நல்லசாமி (9894099955)
ஏ.நபீசு அகமது (9444108073)
Leave a Reply