திருச்சிராப்பள்ளி - thiruchi தூய நகரம், திருச்சி - cleancity_thiruchi

தூய்மையான நகரங்கள் பட்டியலில்

மூன்றாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது திருச்சிராப்பள்ளி!

  இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிராப்பள்ளி மாநகரம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த திருச்சிராப்பள்ளி தற்பொழுது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கருநாடகத்தின் மைசூர் நகரம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.

  தூய்மையான நகரங்கள் குறித்து இந்தியத் தர ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளை நடுவண் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய(நாயுடு) இன்று வெளியிட்டார்.

  அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் முதலிடம் பெற்ற கருநாடகத்தின் மைசூர் நகர் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  பஞ்சாபின் சண்டிகர் நகர் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை திருச்சிராப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan