தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ளிமாணவி வெற்றிப்பேறு !
தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில்
தேவக்கோட்டை பள்ளிமாணவி வெற்றிப்பேறு
தேவக்கோட்டை : தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில் தேவக்கோட்டைபெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று அருவினை ஆற்றினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய வருவாய் வழி-திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்பிரவரி மாதம் நடந்தது. தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஐந்நூறு ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது. தமிழகம் முழுவதும் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வின் முடிவுகள் வெற்றி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குத் தெரியபடுத்தப்பட்டுள்ளது. 6695 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தேவக்கோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியின் மாணவி தி.தனம் தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார் .
பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இது குறித்து வெற்றி பெற்ற மாணவி தனம் கூறுகையில், “நான் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஈரோடு தொடரூர்திப் பள்ளி ஆசிரியர் துரைப்பாண்டியன், பெற்றோர்கள் ஆகியோரின் விடா முயற்சியே காரணம். அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனது தயார் கூலி வேலை செய்து என்னையும், என் தம்பியையும் படிக்க வைத்தபோதும், பள்ளியில் வழங்கிய தொடர் சிறப்புப் பயிற்சியின் காரணமாகவே நான் வெற்றி பெற்றுள்ளேன்” என்றார்.
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத்தேர்வு முடிவு முதன்மையானதாகும்.
jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/
+++
Leave a Reply