50anti-dengue_actions01

 

தேவதானப்பட்டிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முன் எச்சரிக்கையாகச் செய்யப்பட்டு வருகின்றன..

தேவதானப்பட்டிப் பகுதியை இருபிரிவுகளாகப் பிரித்து மருத்துவக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

மாவட்ட மருத்துவத் துணை இயக்குநர் காஞ்சனா உத்தரவின்பேரில் சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி   பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் இருந்து காற்பட்டைகள்(டயர்கள்), தேங்கியிருக்கும் கழிவுநீர்க் குட்டைகள், தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்களில் அபேட் மருந்துகளை ஊற்றியும்; திறந்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடக்கோரி விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.

மழைக் காலமாதலின் என்புமுறிவு நோய் பரவி வருவதைத் தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கை கையாளப்பட்டுவருவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

50anti-dengue_actions02

vaigaianeesu_name03