vaigaianeesu_name03

50_thevathaanappaatti_rain

தேனிப்பகுதியில் பகுதியில் தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டிப் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் விட்டு விட்டும் சில இடங்களில் விடாமல் தொடர்ந்தும் மழை பெய்துவருகிறது. இதனால் சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி முதலான பகுதிகளில் உள்ள கண்மாய்கள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

தொடர்மழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும் பண்டிகைக்காலத்தில் யாரும் வெளியே தலைகாட்டமுடியாத அளவிற்கு மழை பொழிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

50Rain