பகிரழைப்பிwhatsapp

இராசேசு இலக்கானி03 -rajesh lakhani03

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க 

பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்!

அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை நெறிமுறைகளை மீறி நடப்பவர் குறித்து முறையிட பகிரழைப்ப (வாட்சு-ஆப்) எண்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தத் தமிழகத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி, “தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள்   செயற்பாட்டில் உள்ளன. மாநிலம் முழுவதிலும் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப் பொறிகளைச் சரி பார்க்கும் பணி 90% முடிந்து விட்டது.

சட்டமன்றத் தேர்தலில் நடத்தை நெறிமீறல் குறித்து முறையிட

9444123456 என்கிற பகிரழைப்பி  எண்ணும் 1952 என்கிற தொலைபேசி எண்ணும்

வழங்கப்படுகிறது. இந்த எண்களில், முறையீடு குறித்துச் செய்தியாகவும், விவரங்கள், படங்கள் ஆகியவற்றை இணைத்தும் அனுப்பலாம்” என்று கூறினார்.

– ஞா.பி.