வைகைஅனீசு குடும்பம்

வைகைஅனீசு குடும்பம்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்னாற்றுங் கொல்லோ உலகு

தொல்லியல் ஆய்வாளர்

வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!

  தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் ‘அகரமுதல’ முதலான பல இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் செய்தியாளரும் கட்டுரையாளரும் ஆன வைகை அனீசு மறைந்து 3 திங்கள் ஆகின்றது. அவர் பிரிந்ததை இன்னும் உணராச் சூழலில் குடும்பத்தினர் இன்னலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  வரும் கல்வியாண்டிற்கு ஐந்தாம் வகுப்பு பயிலப்போகும் மகனுக்கு [செல்வன் அகமது இன்சமாம் உல் அக்கு – Ahmed Inzamam-ul-Haq] உரூபாய் 28.000, இரண்டாம் வகுப்பு பயிலப்போகும் மகளுக்கு [செல்வி நிசுமா –  Nishma] உரூபாய் 22,000 என மொத்தம் உரூபாய் 50, 000 செலுத்த வேண்டியுள்ளது.

  ஆண்டுதோறும் கல்விக்கட்டணத்திற்குப் பிறரைச்சார்ந்து இருப்பதைவிட, நன்கு படிக்கும் இருவரும் தொடர்ந்து படிக்கும் வகையில் ஏற்பாடு செய்வதே நன்று. எனவே, தடையீடில்லாமல் இருவரும் கற்பதற்கு அறக்கட்டளை மூலம் நிலையான உதவி வழங்க வந்தால் சிறப்பாக இருக்கும்.

  திருவாட்டி இரெகமத்து அனீசு, கேரளாவில் இளங்கலை இரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். திருமணத்திற்குப்பின் தமிழ்நாடு வந்தமையால் கல்வி தடைப்பட்டுவிட்டது. மலையாளத்தில் பயின்றவர். தமிழ் எழுதவும் பேசவுமே தெரியும். இச்சூழலில் தமிழ்நாட்டில் அரசு வேலைக்கான வாய்ப்பு இல்லை. தனியார் நிறுவனத்திலும் அவ்வூரில் 1000 அல்லது 1500 உரூபாய்தான் கிடைக்கும் என்கின்றனர்.

  எனினும் பணித்தகுதிக்கான அடிப்படைத்தமிழைப் படித்துத் தேர்ச்சியடைவதாகக் கூறுகிறார். வரும் கல்வியாண்டிற்குள் எங்காவது வேலையில் அமரவும் முயல்வதாகக் கூறியுள்ளார். அப்படிக்கிடைப்பது குடும்பச் செலவிற்குப்போதுமானதாக இராது. ஆனால், இன்னும் வைகை அனீசு வாழ்ந்து கொண்டிருப்பதாகவே எண்ணும் அவருக்கு   ஆறுதலும் நம்பிக்கையும் தருவதாக அமையும்.

  பொதுநலன் கருதி உழைத்து மறைந்த தொல்லியல் ஆராய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டும் எனப் பலரும் விரும்புகின்றனர். அவரது பிள்ளைகளின்கல்விக்கு உதவுவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

  பொருளுதவி வழங்க முன்வருவோர்கள் நேரடியாகப் பின்வருமாறான வங்கிக்கணக்கில் செலுத்தவும் செலுத்திய விவரத்தைத் தெரிவிக்கவும் வேண்டுகின்றோம்.

பெயர் : இரகமத்து பீவி [Rahamath beevi.n]

வங்கி : இந்திய அரசு வங்கி (State Bank of India)தேவதானப்பட்டி(DEVADANAPATTI)

சேமிப்புக் கணக்கு எண் : 20291255333

இந்திய நிதிமுறைமைக் குறியீடு IFSC Code : SBIN0002210   (5th character is zero)

காந்தமை உரு அறிகுறி MICR Code : 626002050

கிளைக்குறி Branch Code : 002210 (Last 6 Characters of the IFSC Code)

வங்கியில் நாம் செலுத்தும் பணம் போதுமான அளவு சேர்ந்ததும் வட்டித்தொகை, வங்கிமூலம் திங்கள்தோறும் குடும்பச்செலவிற்காக வழங்கப்பெறும் வகையில் நிலை வைப்பாக மாற்றப்படும்.

நன்மனம் மிகுந்தவர்   நல்லுதவி புரிவீர்!

உறுபொருள் குறைந்தோர் இயன்றன உதவுவீர்!

இவண்

‘அகரமுதல’ படிப்போர் வட்டம்

இதழுரை

அகரமுதல 120, மாசி 02, 2047 / பிப்.14, 2016

Akaramuthala-Logo