தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை தொடர்ச்சி) இனிய அன்பர்களே! வைக்கோல் போரில் மாடு படுத்துக் கிடக்க நியாயமுண்டு. ஆர்.எசு.எசு. ஆளுநர் ஆர்.என். இரவி படுத்துக் கிடக்க நியாயமே இல்லை. வைக்கோல் போரில் படுத்துக் கிடக்கவே நியாயமில்லை என்றால், சட்டப் பேரவை இயற்றும் சட்டமுன்வடிவுகளைக் கீழே போட்டு ஏறிப் படுத்துக் கிடக்க ஏது நியாயம்? இரவியின் அடாவடித்தனத்தால் முடங்கிக் கிடக்கும் முன்முயற்சிகளில் ஒன்று சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்னெடுப்பாகும். இது குறித்து சித்த மருத்துவப் பேரியக்கம் விடுத்துள்ள…

தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! –புதுச்சேரி அரசிற்கு வேண்டுகோள்

        கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர்க்கு வேண்டுகோள்!         தமிழ்ப் பணி,கலை,இலக்கியப் பண்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கடந்த பல்லாண்டுகளாகப் புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. அவை வருமாறு: தொல்காப்பியர்விருது10ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படவில்லை. 2. சிறந்த நுால்களுக்கான கம்பன் புகழ்ப்பரிசு, நேருகுழந்தைகள் விருது, போன்றவைபலஆண்டுகளாக வழங்கப்படவில்லை.  புதுச்சேரி எழுத்தாளரகளின் நுால்கள் நுாலகங்களுக்கு வாங்கப்படவில்லை.  கடந்த 25ஆண்டுகளாக ஒரு புதிய கிளைநுாலகம்கூடத் திறக்கப்பட வில்லை. 5. இருக்கும் நுாலகங்களுக்கு நுாலகர்கள் அமர்த்தப்படவில்லை. உரோமன் உரோலந்து…

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்! அன்புடையீர், வணக்கம். தமிழ்நாட்டில்(சென்னையில்) இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும்  முயற்சியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இறங்கியுள்ளதை அறிவீர்கள்.   தமிழ்வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வுப்பணிகளையும் முற்றிலும்  நிறுத்துவதற்கான முயற்சி இது. இதனை முறியடிக்கும் வகையில் வரும் ஞாயிறு ஆடி 07, 2048 / 23.07.207 அன்று  முற்பகல் சென்னையில் தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், அனைத்திந்தியத் தமிழ்ப்பேரவை ஆகிய உறுப்பு அமைப்புகள் சார்பாகக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில்…

மாற்றத்தை விரும்பும் மக்கள் – திருவாரூர்ச்செல்வன்

மாற்றத்தை விரும்பும் மக்கள்     கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் மக்கள் மனநிலை மாறியுள்ளது. பொதுவாக இதற்குமுன்பும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். ஆனால் அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர்  என்பதுபோல், முந்தையத் தேர்தலில் புறக்கணித்தவரை இந்தத் தேர்தலில் புறக்கணித்தும் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பவரை அடுத்தத் தேர்தலில் வரவேற்றும் மாற்றத்தை வெளி்ப்படுத்தினர். இத்தகைய போக்கே இருமுதன்மைக் கட்சிகளுக்கும் திருந்திய பாதையில்  நடைபோடாமல் முந்தைய குற்றப்பாதையிலேயே விரைந்து செல்லும் தன்மையை உருவாக்கியது. இதனால்தான்  மக்கள் எதிர்த்தாலும் அரசே மதுவை விற்றல், தமிழ்வழிப்பள்ளிகளை மூடல்,…

தமிழர்களுக்கு மட்டும் வேண்டுகோள்! – ஆ.சு.மணியன், தமிழர் சங்கம்

தமிழர் சங்கம் ஆ.சு.மணியன்,    திருத்துறைப்பூண்டி அன்பு வேண்டுகோள்   உலகத்தமிழர்களே!   உலகத்தமிழர்களை (இணையம் வழியாக) ஒன்றிணைக்க முனைந்துள்ளோம்.   எனவே தமிழர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்! தமிழர்கள் அல்லாதவர்களைச் சேர்க்க மாட்டோம்  எனத் தமிழர் சங்கத்திலிருந்து   அறிவிக்கிறோம். தமிழர்கள் தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல்முகவரி,   பேசி எண்கள், தந்தை மொழி, தாய்மொழி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குடும்பத்தில் காதல் திருமணம் செய்தவர் இருந்தால் அவர் குறித்த விவரம், மேலும் தமிழ் மக்கள்வளர்ச்சியடைய சிறந்தவழி முதலியவற்றைப்  பகிர்பேசி வழி, மின்னஞ்சல்வழி, யனுப்பிட வேண்டுகிறோம்…

தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!   தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் ‘அகரமுதல’ முதலான பல இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் செய்தியாளரும் கட்டுரையாளரும் ஆன வைகை அனீசு மறைந்து 3 திங்கள் ஆகின்றது. அவர் பிரிந்ததை இன்னும் உணராச் சூழலில் குடும்பத்தினர் இன்னலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   வரும் கல்வியாண்டிற்கு ஐந்தாம் வகுப்பு பயிலப்போகும் மகனுக்கு [செல்வன் அகமது இன்சமாம் உல் அக்கு – Ahmed Inzamam-ul-Haq] உரூபாய் 28.000,…

தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…

தமிழ் உரிமை காக்க இலக்குவனார் வேண்டுகோள்!

  தமிழ் உரிமை காக்கப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது குறித்த இலக்குவனார் வேண்டுகோள்! கல்வித்துறையிலும் ஆட்சி, நீதி, கலைத் துறைகளிலும் தமிழ்உரிமையை நிலைநாட்டும் நல்லநோக்கத்துடன், அண்மையில் தமிழ் உரிமைப் பெருநடைச் செலவொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். கல்லூரிகளில் உடனே தமிழைப் பாட மொழியாக ஆக்கவேண்டியதின் இன்றியமை யாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்க ளிடையே தமிழ்மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள்மூலம் படிப்ப தனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப்…

கங்கைகொண்ட சோழபுரம் மண்ணின்மைந்தர்களுக்கு வேண்டுகோள்

சோழப்பெருவேந்தன் இராசராச சோழனது அருமைப்புதல்வன் முதலாம் இராசேந்திர சோழன், தி.பி. 1043 முதல் தி.பி. 1075 வரை / கி.பி.1012 முதல் 1044 வரை சோழ மண்ணில் ஆட்சி புரிந்த மாமன்னன். வடக்கே கங்கை முதல் தெற்கே கடாரம் வரை வெற்றி கண்ட வேந்தன்.கங்கை வெற்றிக்குப்பின் அவ்வெற்றியின் நினைவாக ஊரையும் கோவிலையும் தேர்ந்துவந்து அருகே சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றையும் வெட்டுவித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரத்தில் அம்மன்னன் எடுப்பித்த கோவில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் புகழோடு இன்றும் இருந்து வருகிறது. இக்கோவிலைப் பற்றியும் கங்கைகொண்ட…

புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்

  திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள்.   தமிழ் ஈழம்  தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்!   நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…