vidyasakar_viruthu

  குவைத்து எண்ணெய்வள நாட்டில் அமைந்துள்ள நமது தமிழர்களின் அமைப்புகளில் தொழில்சார்ந்த அமைப்பான ‘தமிழ்நாடு பொறியியல் குழுமம்‘ சால்மியா எனும் நகரிலுள்ள “தி இரேடிசன் ப்ளு” உயர்தர நட்சத்திர விடுதியில் 02.11.2016 அன்று   நட்சத்திரப் பொறியாளர் விருது வழங்கும் விழாவினை எடுத்து நடத்தியது. ‘குவைத்து எண்ணெய் நிறுவனத்தின் முதன்மைத் தலைமை அதிகாரி (CEO of KPC) முன்னிலை வகித்தார்.

   உலகத்தர வரிசையில் பல முன்னிலை நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது த.பொ. குழுமம்.

  அதற்கிடையே எங்கள்(KOMC) நிறுவனத்திற்கு   -விரைவு  கால (API தர) மேலான்மைச் சான்றிதழைப் பெற்றமைக்கும், தரக் கட்டுப்பாடு-தர வரையறைத் துறை மேம்பாட்டு வளத்தையும் பாராட்டி-அருந்திறல்(சாதனை) விருதினைத் தந்து மதிப்பு கூட்டியது த.பொ. குழுமம்.

  மூத்த பொறியாளர் செந்தமிழ் அரசு, அறிவியல் அறிஞர் முனைவர் நீலமணி, கடலாராய்ச்சி துறை முனைவர் குமார், பல்கலைகழக உயர் பேராசிரியர் பால் மனுவேல், மூத்த பொறியாளர் நடராசன்  போன்றோர் இருக்கும்  அவையில் எங்களின் நிறுவனத்திற்காக நான் விருது பெற்றதும் பெருமையாகவே இருந்தது.

   த. பொ. குழுமத் தலைவர் திரு.செயக்குமார், செயலாளர் திரு. சான் செந்தில் இருவரும் மிகச் சிறப்பாக வரவேற்புரை வழங்கி விழாவினைத் தொடக்கிவைத்தனர். பொறியாளர்  செம் பிரசன்னா, தங்கையுடன் சேர்ந்து மிகத் தரமாக நேர்த்தியாக விழா நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். முன்னிலையில் பெயர் சொல்லிக்கொண்டே போகத்தக்க பல முன்னாள் பொறுப்பாளர்களும் பொறியாளர்களும் எண்ணெய்  வளி சார்ந்த குவைத்திய மேலாளர்களும் கலந்துக்கொண்டு பெருமைச் சேர்க்க, விழா ‘தாய்மண்ணே வணக்கம்’ பாடலோடு நிறைவுற்றது.

  வித்தியாசாகராக இதுவரை வாங்கிய விருதுகளும் பட்டங்களும் வேறு; இது வாழ்வின் பாதியை வீட்டிற்கு வெளியே தொலைத்துவிட்டு, இன்றும் பாலைநிலந்தோறும் பணிநிமித்தம் ஓடிக்கொண்டிருக்கும் வெங்கடாசலத்திற்கு முதன்முதலாய்க் கிடைத்த உலகத்தரவரிசை  அறிந்தேற்பு என்பதில் பெருமகிழ்ச்சி உண்டு.

 தேர்வுக் குழுவிற்கும், தமிழ்நாடு பொறியாளர் குழுமத்திற்கும்,  பொறுப்பாளர்களுக்கும், முன்பின் உழைத்தவர்களுக்கும், எனது நிறுவன உழைப்பாளிகளுக்கும், என்னோடு பயணிக்கும் உங்களுக்கும் மனதிற்கினிய மகிழ்ச்சியோடு கலந்த கைகூப்பு! நிறைய அன்பு. நெஞ்சினிக்கும் நன்றி.

 

வித்தியாசாகர்  (எ) வெங்கடாசலம் கோவிந்தன்

முகில் படிப்பகம் – https://youtu.be/njiWTY25D9g

த. பொ. குழுமம் – http://www.tefkuwait.com/gallery