vasanthathandapani-bharathidasandaughter02

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள்

வசந்தா தண்டபாணி அவர்கள் மறைவு

 

புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக ஆவணி 28, 2045 / ஆக. 13 அன்று காலமானார். அவருக்கு அகவை 84.

சரசுவதி, இரமணி, வசந்தா, மன்னர்மன்னன் ஆகிய மக்கள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு இருந்தனர். இவர்களில்   மூன்றாம் மகள் இரமணி சிவசுப்ரமணியம் 1970- இல் காலமாகி விட்டார். பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் அவர்கள் தம் 92ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை எய்தினார்.

புதுச்சேரியில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த, நடு மகள் வசந்தா முத்தியால்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அண்மைக்காலமாக, அகவை முதிர்வு காரணமாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தவர் நலங்குன்றி இயற்கை எய்தினார். உடன், தமிழன்பர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் மறுநாள் புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ்ச்செல்வம், பாண்டியன், சேரன் என காலமான வசந்தாவுக்கு மக்கள் உள்ளனர்.

 bharathidasan07