சிவஞானம், ஈழம்

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை!
சீ.வி.கே.சிவஞானம்

“வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவில்லை” என்று வட மாகாண அவையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

  புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நாடு திரும்பி முதலீட்டு, வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், இதற்கான பொருத்தமான சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இஃது அரசின் நேர்மை மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

  எனவே, புலம்பெயர்ந்த மக்கள் யாரும் நாடு திரும்பவோ, இலங்கையில் வணிக முயற்சிகளில் ஈடுபடவோ விரும்ப மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

                            –  ஈழதேசம்பங்குனி 22, 2047 4.4.2016.

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar