பாரதிவிழா, மாணிக்கவாசகம்பள்ளி ;bharathy_vizhaa01

மாணிக்கவாசகம் பள்ளியில்  பாரதியார் விழா

தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா  நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர்  சீவா வரவேற்றார்.

பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

விழாவில் மாணவர்கள்  சனசிரீ, ஐயப்பன்   “பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை” என்கிற பாடலையும், மாணவர்கள் கார்த்திகேயன், இராசேசுவரி, “பாரதியாரின் புதுமைப் பெண்” என்கிற தலைப்பில் அமைந்த கவிதையையும் பாடினார்கள்.

மேலும் பாரதியார் படத்துக்கு வண்ணம் தீட்டுதல், பாரதியார்  படம் வரைதல் ஓவிய போட்டியில் ஆகாசு, பாலமுருகன், அம்முசிரீ, கிசோர்குமார், கிருத்திகா, பரத்துகுமார், அரிகரன், காயத்திரி ஆகியோர்   கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் நடைபெற்ற தமிழ்நாடு காலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கும், தேவகோட்டையில் இருந்து சிவகங்கை அழைத்து சென்ற ஆசிரியர்  சிரீதர்க்கும் பாராட்டுரைகள் வழங்கப்பட்டன; மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

நிறைவாக மாணவர் சகா  நன்றி கூறினார்.