மாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் நந்தகுமார் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்நாள் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் தனலெட்சுமி, இரஞ்சித்து, உமா மகேசுவரி , சீவா, பரமேசுவரி, பார்கவி இலலிதா, இராசேசுவரி, நித்திய கல்யாணி, காயத்திரி ஆகிய மாணவர்களுக்கும், இரோசிமா – நாகசாகி நாள் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் பெற்ற காயத்திரி, ஐயப்பன், கிசோர்குமார், சனசிரீ, அரிகரன், சுருதி ஆகிய மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கபட்டது.
பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்தப்பட்டனர்.
பள்ளி விடுமுறை நாளன்று காரைக்குடிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் சிரீதருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக மாணவர் இராசேசு நன்றி நவின்றார்.
Leave a Reply