முற்றாக முடங்கிய வடமாகாணம்01 - ilangaikadaiadaippu_gana02

இலங்கை முழு அடைப்புப் போராட்டம் – முழுமையாக முடங்கியது வடக்கு மாகாணம்

  வவுனியாவில் மாணவி அரிசுணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடிய நிகழ்வுக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் பிப்ரவரி 24, 2016 அன்று முழுமையாக முடங்கியது.

 பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

 இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் வணிக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் மட்டும் மருந்துக் கடைகளும், உணவகங்களும் திறந்திருந்தன. பெரும்பாலான வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.

 தனியார் பேருந்துச் சேவை முற்றாக முடங்கியிருந்தது. அரசுப் பேருந்துகள் ஆங்காங்கே மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபட்டன. மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 மொத்தத்தில் இந்தப் போராட்டத்தினால், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டது.

புதினப்பலகை

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan