வெட்டிவலைப்பதிவர்,சிறுகதைப்போட்டி : vettyblock_chirukathaipoatti

வெட்டிப் பதிவர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2016

வணக்கம் வலைப்பதிவர்களே!

  ‘வெட்டிப் பதிவர் முகநூல் குழுமம்’ வலைப்பதிவர்களுக்கென்று கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  வலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்குச் சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையைக் குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்குப் பறைசாற்ற இஃது அருமையான ஒரு வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குநர்கள், பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் தென்பட இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்!! வெல்லுங்கள்!!!

பரிசுத் தொகை

முதல் பரிசு உரூ. 8000
இரண்டாம் பரிசு உரூ. 5000
மூன்றாம் பரிசு உரூ. 2500
சிறப்புப் பரிசு உரூ. 750 – ஆறு படைப்பாளிகளுக்கு

 
நெறிமுறைகள்:

  1. வலைப்பதிவர்கள் மட்டும்தாம் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது) கலந்து கொள்ள வேண்டும்.
  2. ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

  3. இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருத்தல் வேண்டும்.

  4. கதை இரண்டாயிரம் சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்த வரை, தற்கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்!

  6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது! வெட்டிப் பதிவர் இயக்குநர்கள் (admins), நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது!
  7. மின்னூல் (PDF) / வேர்டு (MS WORD) / குறிப்பேடு (NOTEPAD) ஆகியவற்றிலோ பிற வடிவிலோ இணைப்பாக அனுப்ப வேண்டா! ஒருங்குகுறி(Unicode) முறையில் கணியச்சிட்டு(type) மின்னஞ்சலில் மட்டுமே அனுப்புங்கள்!

கடைசி நாளும் சில தகவல்களும்:

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைப்பூ முகவரி, உங்கள் தொடர்பு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு  01-06-2016 இரவு 12.00க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

கதையாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படா. போட்டி முடிந்த பின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

நடுவர்களுக்கே யார் எழுதியது எனத் தெரிவிக்கப்பட மாட்டாது!

போட்டி முடிந்த பிறகு உங்கள் வலைப்பூவில் வெளியிடலாம். அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது!

கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

நடுவர்கள்:

முதல் சுற்று:

செங்கோவி

பால கணேசு

குடந்தை ஆர்.வி சரவணன்

சதீசு செல்லத்துரை

இரகீம் கசாலி

‘வீடு’ சுரேசுகுமார்

ஏ.சி.சிவகுமார் (மெட்ராசு பவன்)

கோவை ஆவி (ஆனந்த விசயராகவன்)

‘தமிழ்வாசி’ பிரகாசு

அரசன்

இரண்டாம் சுற்று:

பிச்சைக்காரன்

இராச இராசேந்திரன்

கார்த்திக்கு புகழேந்தி

 

இறுதிச் சுற்று:

வா.மு.கோமு

செல்லமுத்து குப்புசாமி

    ஏதேனும் ஐயம் எனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் வரைக.

 தரவு:

பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan