வெளியாரை வெளியேற்று! – தாயகத்தோர் வாழ்வுரிமை மாநாடு
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!!
1956ஆம் ஆண்டு ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் ஒரு மாநிலம் என்ற வகையில் தமிழ்நாடு பிறந்தது. ஆனால், இன்று, அச்சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாட்டில் அதிகளவில் வெளி மாநிலத்தவர்கள் நுழைந்து கொண்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் மட்டும் 43 இலட்சம் பேர் இவ்வாறு குடியேறியுள்ளனர். இதன் காரணமாகத், ‘தமிழ்நாடு- தமிழர்களின் தாயகம்’ என்ற அடிப்படை நிலையே மாறிவருகின்றது.
மேலும், தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் அனைத்தின் தலைமைப் பொறுப்புகளிலும், பணியாளர்கள் எண்ணிக்கையிலும் அயல் இனத்தாரே மேலோங்கி நிற்கின்றனர். ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகமும் அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தடையில்லாச் சான்று பெற்ற பிறகே, தாமே பணியாளர்களை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்ட விதி தெரிந்தே மீறப்படுகின்றது.
தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களின் முதன்மைத் தொழில்களில், திரைத்துறையில், மனை வணிகத்தில், வாகன வணிகத்தில், ஏற்றுமதி சார்ந்த வணிகங்களில் என அனைத்து வகை வணிகங்களும், அயலார் கையிலேயே இருக்கின்றன. அடிப்படைத் தொழில்களிலும் அயலார் மிகை எண்ணிக்கையில் புகுவது, நிலைமையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டுள்ளது.
எனவே, இவற்றைக் களைய, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே கல்வி – வேலை வாய்ப்பு – தொழில் – வணிகம் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தி வரும்புரட்டாசி 12, 2045 – செப்டம்பர் 28 ஆம் நாள் ஞாயிறு அன்று, சென்னை தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் ஒரு நாள் மாநாடு நடைபெறுகின்றது.
இம்மாநாட்டில், வெளியார் எதிக எண்ணிக்கையில் நுழைவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என விளக்கி, பல்வேறு அறிஞர் பெருமக்கள் கருத்துரைகள் வழங்குகின்றனர். வெளியாரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் துயரங்களை எடுத்துரைக்கின்றனர்.
இந்த மாநாட்டில், தாங்கள் நிச்சயம் கலந்து கொண்டு, கருத்துகளை உள்வாங்கிச் செல்ல வேண்டுமென மாநாட்டுக் குழுவின் சார்பில் அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்தளவிற்கு, மாநாட்டிற்கு உதவும் வகையில், நிதி – கருத்து – அறிவுரைகளை வழங்க வேண்டுமெனவும் தங்களை இம்மடல் வாயிலாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 9841949462
Leave a Reply