இணையத் தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்

உருவாக்கம்: இரவி நடராசன்

மின்னஞ்சல்: ravinat@gmail.com

மேலட்டை உருவாக்கம்: இலெனின் குருசாமி

மின்னஞ்சல்: guruleninn@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

’சொல்வனம்’ இதழில் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் எழுதிய இணையம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதைப் பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த வகையில் பயன்படுத்துவதோடு, இணையத்தில் ஏமாறாமல் இருப்பதும் சாத்தியம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில்தான், இணைய மோசடிகளால், பலரும் பேராசையினால் தங்களுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். முதல் இரண்டு கட்டுரைகள், உங்களுடைய அந்தரங்கம் எவ்வளவு முக்கியமானது, அதை எப்படி எல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரைகள்.

அடுத்த மூன்று கட்டுரைகள் இணையம் எப்படி அச்சுத் தொழிலுக்கு அறைகூவலாகப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரைகள். சான்றாக, இக்கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ இதழ் இத்தகைய தொழில்நுட்பத்தால் உருவானது. மேலும் இன்று நீங்கள் இந்த மின்னூலைப் படிப்பதும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் என்றால் மிகையாகாது. பெட்டிக்கடையில் வாங்கினால்தான் புத்தகம் என்ற காலம் போய்விட்டது. இணையத்தில் படிக்க ஆசை இருப்பவர்களுக்கு அவர்களது சுவைக்கேற்பப் பரிமாறப் பல தளங்கள் உள்ளன.

euul_inaiyathozhilnutpangal_attai

மின்னூல் வெளியீடு :

http://FreeTamilEbooks.com

பதிவிறக்க:

http://freetamilebooks.com/ebooks/glimpses-of-internet-technologies/

உரிமை – Creative Commons Attribution – Non Commercial – No Derivatives 4.0 International License.

 உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

தகவல் டி.சீனிவாசன்