எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்!
எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்!
இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக எசு.செல்வசுந்தரியின் ‘கை நழுவும் சொருக்கம்‘ (சிறுகதை நூல்) ‘உன்னை விட்டு விலகுவதில்லை‘ (புதினம்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் முனைவர் கே.எசு.பழனிச்சாமி தலைமையில் எழுத்தாளர் மதுரா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராசு, வரலொட்டி ரெங்காசாமி, குமாரசாமி, பாசுகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் இராச்சா, திருநங்கை பிரியாபாபு ஆகியோர் நூல் ஆய்வு செய்தனர் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்து கொண்டு “இன்றைய குமுகம் எழுத்தாளர்களை ஏற்கு மதிக்க வேண்டும் புத்தகங்களை வாங்கிப் படிப்பதே எழுத்தாளர்களுக்குச் செய்யும் பெரிய உதவி” என்று சிறப்புரையில் பேசினார்
செல்வசுந்தரி ஏற்புரை நிகழ்த்த முன்னதாக புலவர் தியாகசாந்தான் அனைவரையும் வரவேற்க, கவிஞர் சேதுமாதவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
Leave a Reply