tnvirtualuniversity02

அன்புடையீர்,

வணக்கம்,

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக

ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ என்ற தலைப்பில் ஒரு

நாள் கருத்தரங்கு, 05.03.2014, புதன்கிழமை அன்று, த.இ.க. கலையரங்கில்

நடைபெறும்.

கீழ்கண்டுள்ள தலைப்புகளில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெறும்.

1.      தமிழ் பின்னம் – பெயரிடல், வரிவடிவம் தொடர்பாக.

2.      ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் – பயன்பாடு

3.      ” ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு” – திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு

4.      தமிழ் ’16- ஓர்மி(பிட்டு)’ அனைத்துரு எழுத்துரு (TACE16) – செயல் திட்டம்

5.      நவீன கருவிகளில் தமிழ் – சிக்கல்களும் தீர்வும்

6.      கலந்துரையாடல்

தாங்கள்,   நண்பர்களுடன் இக்கருத்தரங்கில் பங்குபெற்று தங்கள் கருத்துகளை வழங்குமாறு அழைக்கிறோம்.

கருத்தரங்கிற்குப் பதிவு செய்ய, http://www.tamilvu.org/seminar/index.htm என்ற

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழி விண்ணப்பம் மூலம் பதிவு செய்யுமாறு

கேட்டுக்கொள்கிறோம். கட்டணம் எதுவுமில்லை.

 

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள

 

முனைவர் ப.அர. நக்கீரன்

இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்