கடலூரில் தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா
தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா, கடலுார் கடலூர் மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் திருப்புமுனைப் பயிற்சி நடுவத்தில் நடைபெற்றது. பேரா.இராச.குழந்தை வேலனார் தலைமை தாங்கினார்.
‘தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள்‘ என்னும் தலைப்பில் முனைவர் க.தமிழமல்லன் சிறப்புரை நிகழ்த்தினார்.
புலவர் சிவ.இளங்கோவன், கதிர்.முத்தையன் ஆகியோர் பாவேந்தர், பாவாணர் அளித்த தனித்தமிழ் இயக்கப் பங்களிப்புக்குறித்துப் பேசினர்.
முன்னதாகப் படத்திறப்பும் பாவரங்கும் நடைபெற்றன.
Leave a Reply