கடலூரில் தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா

  தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா, கடலுார் கடலூர் மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் திருப்புமுனைப் பயிற்சி நடுவத்தில்  நடைபெற்றது. பேரா.இராச.குழந்தை வேலனார் தலைமை தாங்கினார்.  ‘தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள்‘ என்னும் தலைப்பில் முனைவர் க.தமிழமல்லன் சிறப்புரை நிகழ்த்தினார். புலவர் சிவ.இளங்கோவன், கதிர்.முத்தையன் ஆகியோர் பாவேந்தர், பாவாணர் அளித்த தனித்தமிழ் இயக்கப் பங்களிப்புக்குறித்துப் பேசினர். முன்னதாகப் படத்திறப்பும் பாவரங்கும்  நடைபெற்றன.

மே பதினேழு இயக்கம் : பேரழிவை உருவாக்கியது யார்? – கருத்தரங்கம்

  சென்னை – கடலூர் பேரழிவை உருவாக்கியது யார்? இனிவரக்கூடிய பேரழிவினைத் தடுப்பது எப்படி? – கருத்தரங்கம்    மார்கழி 24, 2046 / 09.01. 2016, சனிக்கிழமை மாலை 4 மணி, செ.தெ.நாயகம் பள்ளி, தியாகராயநகர், சென்னை. மே பதினேழு இயக்கம்

சென்னை வெள்ளம் கடலூரை மூழ்கடித்து விட்டதா? – என்.முருகவேல்

கடலூரில் இடைவிடாத கொட்டும் மழை!   கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்ட மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். நவ.9 பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்டு, 66 உயிர்களை பலிவாங்கியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக மழை சற்று விட்டு விட்டுப் பெய்த நிலையில் துயரீட்டு உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன.   இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாகப் பெய்துவரும் கனமழையால் மாவட்டம் மீண்டும் தத்தளிக்கிறது. கெடிலம், தென்பெண்ணையாறு, பரவானாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது….

50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்

சீரமைப்பதற்கு ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச், சென்னை மாநகரம்…

தமிழர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றுகிறார் செயலலிதா : கடலூரில் கருணாநிதி பேச்சு

  கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்  மருத்துவர்நந்தகோபாலக் கிருட்டிணனை ஆதரித்து கடலூரில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழக முதலமைச்சராக இருக்கிற அம்மையார்  செயலலிதா, ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்தான் கவலைப் படுவதை போலவும் நமக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றிக் கவலை கிடையாது போலவும்  பேசி வருகிறார். தி.மு.க வின் ஈடுபாடு தமிழ்ச்சமுதாயத்தை வாழவைக்க வேண்டும் என்பது ஒன்றுதான். செயலலிதா நம்மை எல்லாம் எந்த அளவிற்கு அவதிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதை நான் சொல்லாமலேயே  பட்டறிவு மூலம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.  வருகின்ற வழியெல்லாம்  சிற்றூர்கள் தோறும்…