செல்வி நிகாரியின் இசைப்பேழை வெளியீடு01 ;vai-pazhanichamy-ias-honered-balamurali-krittina

   மரு.இராசுகுமார்-சுவர்ணசிரீயின் திருமகளும் முனைவர் வை.பழனிச்சாமி  இ.ஆ.ப.(நி) – மணிமேகலை, திரு பழனியப்பன்-முத்துராதா ஆகியோரின் அன்புப்பெயர்த்தியுமான 7-ஆம்வகுப்பு பயிலும் செல்வி ப.இரா.நிகாரிகாவின் ‘அழகு தமிழ் முருகா‘ என்னும் இறைப்பாடல்கள் ஒலிப்பேழை, சென்னை உருசியக் கலை-பண்பாட்டு மையத்தில் ஐப்பசி 20,2047 / நவம்பர் 05,2016  மாலை வெளியிடப்பட்டது.

இசையறிஞர் பாலமுரளிகிருட்டிணா ஒலிப்பேழையை வெளியிடத் தமிழ்ப்புரவலர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார்.
திரு வை. பழனிச்சாமி இ..ஆ.ப., வரவேற்புரை யாற்றினார்.
நல்லி குப்புசாமி, இந்தியப் பண்பாட்டு உறவுக்குழு (ICCR), மண்டல இயக்குநர் திரு ஐயனார், மரு.சீர்காழி சிவசிதம்பரம், ஒலிப்பேழையின் இசைக்கோவையாளர், வேதம் புதிது தேவேந்திரன், வாழ்த்தினர்.

பாடியவர் தந்தை மரு.இராமமூர்த்தி  பாடலியற்றிய கலைஞர்களான கவிமுகில் கோபாலகிருட்டிணன்,  கவிஞாயிறு குமரன், கலைமாணி திருச்சி பரதன்,  நிலவை பழனியப்பன், நெல்லை அருள் சிவசுப்பிரணமணியன்,  ஆகியோரைச் சிறப்பித்தார்.
செல்வி ப.இரா.நிகாரியின் குரு திருபுவனம் ஆத்மநாதன் ஏற்புரை வழங்கினார்.

(படங்களைச் சொடுக்கிப் பெரிய அளவில் காண்க.)

String could not be parsed as XML