சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம்- ஐம்பெரு விழா
தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரு விழா!
தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரும் விழா, சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள தொண்டை மண்டல வேளாளர்களின் சங்கத்தில் வரும் சூன் 2 ஆம் நாளன்று காலை 9 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
சேக்கிழார் பெருமானின் குருபூசை, திருமண வரன் விவரத்திற்கு புதிய இணைய தளம், அன்மையில் மறைந்த நீதியரசர் எசு. நடராசன் அவர்களின் திருவுருப்பட திறப்பு, சென்னை புரசைவாக்கம் கட்டட நிதி உதவி செய்த நன்கொடையாளர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு திறப்பு, சான்றோர்களுக்கு விருது வழங்குதல் என ஐம்பெரும் விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவுக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. எசு.மோகன் அவர்களும், உயர்நீதி மன்ற நீதியரசர் திரு. டி.என். வள்ளிநாயகம் அவர்களும் வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் வி. செயபால் அவர்களும். அஇமுபிவெச(AIMPVS) அமைப்பின் தலைவர் திரு. இராசன் அவர்களும் பங்கெடுத்துக் கொண்டு விழாவினைச் சிறப்பிக்கின்றனர்.
Leave a Reply