ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும்

(ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை): மாடமும் மயானமும்   தொடர்ச்சி) ஊரும் பேரும் 45 தலமும் கோவிலும் கருவூர்-ஆனிலை     பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும், “தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250   226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4 227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2 228. புந்தி…

இல்லறப் பண்புகள் – சேக்கிழார்

இல்லறப் பண்புகள் காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார் – தெய்வச் சேக்கிழார்

சேக்கிழாரின் தமிழ் நெஞ்சம் – கடவூர் மணிமாறன்

சேக்கிழாரின் தமிழ் நெஞ்சம்   சேக்கிழார் தமிழ்நெஞ்சம் உடையவர். தமிழ் இன்பத்தில் துய்த்துக் களித்து அதனைத் தம் காப்பியத்தில் பதிந்துள்ளார். பாண்டிய நாட்டில் வீசும் தென்றல் தென்தமிழை நினைவூட்டுவதாக மூர்த்தி நாயனார் வரலாற்றில் பாடுகின்றார். தென்றல் உடல் வெப்பத்தைத் தணிக்கும். தென்தமிழ் உயிர் வெப்பத்தைத் தணிக்கும். அதனால் தமிழையும் தென்றலையும் ஒருசேர நினைந்து, “மொய்வைத்த வண்டின் செறி சூழல் முரன்ற சந்திரன் மைவைத்த சோலை மலயந்தரவந்த மந்த மெய்வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமிழும் தரும் செவ்வி மணம்செய்யீரம்.” என்று ஞாலம்…

சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை

சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை     செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்

கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் – சேக்கிழார் & பரஞ்சோதி முனிவர்

முழுமுதற் கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் மும்மைப் புலவர்களின் மிக்கதன்றே அம் மூதூர் மெய்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்குவாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார் திருவாலவாயில் எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்ததென்றால் – சேக்கிழார்: பெரியபுராணம் கடவுளும் சங்கத்தமிழ் ஆய்ந்தார் கண்ணுதற் பெருதற்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத தெரித்தாய்ந்த இப்பசுந்தமிழ் – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்

  (வைகாசி 25, 2045 / சூன் 08, 2014 இதழின் தொடர்ச்சி)   83. தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி – பெருங்கதை: 4. வத்தவ காண்டம்: 17. விரிசிகை வதுவை : 67   84. எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய் நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திட(த்) – பெரியபுராணம்: பாயிரம் 3     85. பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள், கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில் – பெரியபுராணம்: 1….

சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம்- ஐம்பெரு விழா

தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரு விழா! தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரும் விழா, சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள தொண்டை மண்டல வேளாளர்களின் சங்கத்தில் வரும்  சூன் 2 ஆம் நாளன்று  காலை 9 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் பெருமானின் குருபூசை, திருமண வரன் விவரத்திற்கு புதிய இணைய தளம், அன்மையில் மறைந்த நீதியரசர் எசு….