ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்ற

“தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா:

புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைப் பிள்ளைகள் விரும்பும் வகையில் எளியமுறையில் எப்படிக் கற்பிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா வைகாசி 30, 2045 /13-06-2014 அன்று ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்றது. விழாவிற்கு வாழ்நாட்பேராசிரியர் சண்முகதாசுஅவர்கள் தலைமை தாங்கினார். சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் தொடக்கவுரைநிகழ்த்தினார்.

பேராசிரியர் சந்திரகாந்தன், பேராசிரியர்இ.பாலசுந்தரம், விரிவுரையாளரான திருமதி செல்வம் சிறிதாசு, கவிஞர் கந்தவனம்பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் திருமதி. வாசுகி நகுலராசா திரு. குரு அரவிந்தன்திரு. (உ)லோகேந்திரலிங்கம் என்போர் சிறப்புரை வழங்கினர்.

திரு. ம.க.ஈழவேந்தன் வாழ்த்துரை வழங்கினார். அவர்களுடன் திரு. இராசுகுமார், செல்விசயனிகா சுரேசு என்போர் கருத்துரை வழங்கினர் நூலாசிரியரின் ஏற்புரையுடன்பிரதிகள் வழங்கப்பட்டுக் கூட்டம் நிறைவெய்தியது.

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

செய்தி – சபா. அருள்சுப்பிரமணியம்.

படங்கள் : எங்கள் ஈழம் இது தமிழீழம்

www.seithy.com