தில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் அரவிந்து கெசுரிவால்
தில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்து கெசுரிவால் இராம்லீலா திடலில் 28.12.13 அன்று நண்பகல் 11.58 மணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அங்கே கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தில்லி துணை நிலை ஆளுநரால், கெசுரிவால் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார்.
இவரைத் தொடர்ந்து சட்ட மன்றத் தேர்த்லில் வெற்றி பெற்ற பிறர் தில்லிச் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அமைச்சுப் பொறுப்புகள்
நிதித்துறை, மின்துறை ஆகியவற்றை முதல்வர் கெசுரிவால் வைத்துக் கொண்டுள்ளார்.
சோம்நாத் பாரதிக்குச் சட்டம்-சுற்றுலாத் துறையும், கிரிசு சோனிக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத்துறையும், இராக்கி பிர்லாவிற்கு மகளிர், குழந்தைகள் நலத்துறையும், மணிசு சிசோடியாவுக்குக் கல்வி, பொதுப்பணித்துறையும், சத்யேந்திர செயினுக்கு நல்வாழ்வுத் துறையும், சவுரவு பரத்வாசுக்குப் போக்குவரத்து துறையும் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply