துபாயில்  சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி.  சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 /  29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர்  சார்சாவில் தமிழ்  ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர்  (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் , திரு.கவின்முருகு,திரு.இளையராசா ,திரு.சிம்மபாரதி, திரு.சசிக்குமார்,திரு. சியாவுதீன் ,திருமதி.சௌமியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  விழாவில் தமிழ்க்குசி.காம் இணைய வானொலியின் தொகுப்பாளர் சுமிதா இரமேசு, அபுதாபியைச் சேர்ந்த பெண்கள் வேலை வாய்ப்புக் குழுவை நடத்தி வரும்  செசி விக்டர்,  தமிழ்த்தேர் அமைப்பின் உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள்  முதலானோர் கலந்துக்கொண்டனர்.

  திருமதி.இரமா மலர்வண்ணன் வரவேற்புரை-நன்றியுரை வழங்கத், திருமதி. ஏமா சிவராசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)

முதுவை இதாயத்து