கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?] திருமாவளவன் விளக்கம் சரிதானே! தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது…

துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா

துபாயில்  சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி.  சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 /  29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர்  சார்சாவில் தமிழ்  ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர்  (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…