பாவேந்தர் பள்ளியில் ஓவியப் போட்டியும் பரிசும்
பாவேந்தர் பள்ளியின் மாணவர் அணியின் சார்பில் பாவேந்தர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. இயற்கையைப் போற்றும் வகையில், குளிர்காலத்தை வரவேற்கும் நோக்கில் ‘சிற்றூர்’ எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 4, 5ஆம் நிலை மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
மாணவர் அணியைச் சார்ந்த த. நவீன், ந. கோபி, தருண், ஆ.பாபு போட்டியை நடத்தினர். போட்டியில்
வெற்றிபெற்றோர்
ச.மோ. துர்கா, தே.ரா. தினேசு, வா.சி. யாமின், வ.கு. சந்தோசு, அ.இ. மணிகண்டன் ஆகிய மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. மாணவர் அணியின் நி.வெ. பண்பெழில், அ.ச. புகழேந்தி, வா.சி. சோதிராசன். ஆ. அமிர்பாசா பரிசுகளை வழங்கினர்.
பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப் பரிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் மாணவர்களின் இயற்கை ஈடுபாடும் ஓவியத்திறனும் வெளிப்பட்டன.
Leave a Reply