புதுவைத்தமிழ்ச்சங்கம், பாரதி விழா : nighazvu_puthuvai_bharathivizhaa

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மார்கழி 10, 2046 /  26-12-2015  நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார்.
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார்.
புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி,செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு,  துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில்  ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ எனும் தலைப்பில்  கவியரங்கம் நடைபெற்றது

 திரைப்பட பாடலாசிரியர் தமிழக அரசின் மேனாள் அரசவைக் கவிஞர் , கவிஞர் முத்துலிங்கம் கவியரங்கத்துக்குத் தலைமை தாங்கினார்

  கவியரங்கில் தமிழ்மாமணி   சீனு. இராமச்சந்திரன், தமிழ்மாமணி ந.ஆதிகேசவன், கலைமாமணி புலவர் நாகி, தமிழ்மாமணி துரைமாலிறையன்,கலைமாமணி கோனேரி பா.இராமசாமி, கவிசர் ஆறு. செல்வன், கலைமாமணி கோ.பாரதி, கவிஞர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணிநன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தனர்.

  புதுதில்லியில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்வில் புதுவையின் சார்பாக கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்  தருண் விசய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மாணவன் பிரகதீசுவரனுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாகப் பாராட்டு வழங்கப் பட்டது

 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஈகி மு. அப்துல் மசீத், கலைமாமணி கல்லாடன், செந்தமிழ் அருவி கலக்கல் காங்கேயன் ஆகியோர் விழாவினை நெறிப்படுத்தினர்.
ஆட்சிக் குழு உறுப்பினர் பேரா.இரா.விசாலாட்சி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர் கலைமாமணி அ.கனகராசு  நன்றி கூறினார்.

விழாவில் திரளான தமிழன்பர்கள் கலந்துகொண்டனர்

மு.பாலசுப்பிரமணியன்

செயலர்,புதுவைத் தமிழ்ச் சங்கம்

கைப்பேசி 9443434488