மாநில வளைகோல் போட்டி : திருநகர் அணி வெற்றி
மதுரை திருநகர் வளைகோல் மன்றம் சார்பில் வளைகோல் வீரர்கள் பாலசுப்பிரமணியன், செயசிங், பழனியாண்டவர் மெய்யப்பன் ஆகியோர்களது நினைவுச் சுழற் கோப்பைக்கான 15– ஆம் ஆண்டு மாநில அளவிலான வளைகோல் போட்டி பிப்ரவரி 5 அன்று காலையில் தொடங்கி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள முதன்மை நகரங்களைச் சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடின.
முதல் நாளன்று காலையில் வாடிப்பட்டி ‘எவர்கிரேட்’ வளைகோல் மன்ற அணியும், இராசபாளையம் பெடட் பிரன்சு அணியும் களத்தில் இறங்கி மோதின. அதில் வாடிப்பட்டி எவர் கிரேட் வளைகோல் அணி 1–0 என்ற இலக்குக் கணக்கில் இராசபாளையம் அணியை வீழ்த்தியது.
2– ஆவது போட்டியில் கோவில்பட்டி தாமசுநகர் வளைகோல் அணியும், வேலூர் ஆற்காடு வளைகோல் அணியும் மோதின. இதில் கோவில்பட்டி அணி 4–0 இலக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்தப் போட்டியினை மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சந்தியா பலராமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வளைகோல் மாவட்டச் செயலாளர் இரமேசு, மாவட்டத் தலைவர் கண்ணன், திருநகர் மன்றத் தலைவர் நாகராசு, பிற பொறுப்பாளர்கள் முருகன், செந்தில், மோகன், கணேசு, நடராசன், பால்ராசு, சீனி வாசன் முதலான பலர் கலந்து கொண்டனர்.
முழு விவரங்களைத் திருநகர் வளைகோல் மன்றத் தளத்தில் (http://www.thirunagarhockeyclub.in/ ) காணலாம்.
இதன் காலிறுதிப் போட்டியை மதுரை மாமன்றத் தலைவர் வி.வி.இராசன் செல்லப்பா தொடக்கி வைத்தார்
தென்மண்டல காவல்துறை அணியும், திருநகர் வளைகோல் அணியும் இறுதிப் போட்டியில் விளையாடியதில் 4-2 என்ற கணக்கில் திருநகர் வளைகோல் அணி வெற்றி பெற்றுச் சுழற் கோப்பையை வென்றது.
போட்டியில் தமிழநாடு தென்மண்டல காவல்துறை அணி இரண்டாம் இடமும், சென்னை வருமான வரித்துறை அணி மூன்றாம் இடமும், தமிழ்நாடு காவல் அணி நான்காம் இடமும் பெற்றன.
Leave a Reply