முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்
முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில்
புத்தாடைகள் வழங்கல்
இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்.
பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை தமது உள்ளத்தில் சுமந்து வரும் இவர்கள் எதிர் வரும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமது இல்ல சிறார்களுக்கான புத்தடைகளை அன்பளிப்பாக வழங்கி வைக்குமாறு கேட்டுள்ளதுடன் அவர்களும் எல்லாரையும் போன்று எதிர்வரும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டை – புத்தாடைகளை அணிந்து மன மகிழ்வுடன் கொண்டாடுவதற்குத் தங்களின் அமைப்பினூடாக 108 பெண் சிறார்களுக்கும் புத்தாடைகளை வழங்கிவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு அமைவாக இன்று தமது 10 ஆவது திருமண ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ் நல்லுள்ளங்கள் 27 சிறார்களுக்கான 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்கள்.
இக் கைங்கரியத்தை ஆற்றியுள்ள செயசுந்தர் கலைவாணி இணையருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்லச் சிறார்கள் சார்பாகவும் வாழ்த்துகளை கூறிக்கொள்ளும் தருணம் இவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை இறைஞ்சுகிறோம்.
Leave a Reply