வளைகுடா வானம்பாடி : திங்கள் சிறப்புக்கூட்டம்
குவைத் வளைகுடா வானம்பாடியின் திங்கள் சிறப்புக்கூட்டம் மங்கப் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.
நிறுவனர் திரு.கா.சேது அவர்கள் தொடங்கி வைக்க திரு சுப்புராசு அவர்கள் தலைமை வகித்தார்கள்.
தாயகத்தில் இருந்து தமிழரின் சிறப்புகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர் தொலைபேசி வழியே பல அரிய தகவல்களைப் பகிர்ந்து சிறப்புரையாற்றினார்.
வழக்கம்போல் குவைத் கலைஞர்களின் பாடல்கள், கவிதைகள் என்று மேடையில் களைகட்டியது.
மருத்துவர் திருமதி சுதந்திராதேவியின் மருத்துவ அறிவுரைப்பகுதி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.
‘தமிழ் சமூகத்தில் காதல்’ என்று நிலவனும், ‘தமிழர்களின் ஒற்றுமை’ என்று திரு சேகர் அவர்களும், வேளாண்மை பற்றி திரு. பட்டுக்கோட்டை சத்யா அவர்களும், ‘குழந்தைகளே பெற்றோர்களின் சக்தி’ என்று சுப்புராசு அவர்களும், ‘தமிழனின் அறிவியல்’ என்று திரு விருதை பாரி அவர்களும் எல்லாவற்றையும் சேர்த்து திரு பழ கிருட்டிணமூர்த்தி அவர்களும் சிறப்புறையாற்றினார்கள்.
பாடகர்கள் திருவாளர்கள் .கணேசு, சண்முகம், செந்தில், பாண்டி, சாந்தகுமார் ஆகிய எல்லாரும் அரங்கைத் தம் இனிய குரலால் கட்டிப்போட்டார்கள். ஈழக்கவிஞர் கணேசு அவர்கள் கனல் கவிதை வாசித்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாகப் பாவேந்தர் கழகப் பொறுப்பாளர்கள் திரு இராசசேகர், சேந்தா இரவி, வேலவன் முதலானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.
காலை 11 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு நண்பகல் உணவு முடிந்த பின்பும் தொடர்ந்து 4 மணிக்கு நிறைவுபெற்றது.
விழாவினை திரு முனு சிவசங்கரன் மிக சிறப்பாக தொகுத்து வழங்க, நிலவன் நன்றி கூற இனிதே நிறைவு பெற்றது.
Leave a Reply