பெறுபேறு மாணவர்கள் சிறப்பிப்பு : maanavargal sirappipu

க.பொ.த  இயல்புத்தரத் தேர்வில் 

5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப்

பெற்றுக் கொண்ட

644 மாணவர்கள்  சிறப்பிப்பு

 மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு   இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது.

  மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின்  ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.

  நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆண்டு க.பொ.த  இயல்புத்தரத் தேர்வில் 5 அ சித்திகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இந்த நிகழ்வில்  தலைமை விருந்தினராக மாநிலக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இவருடன் நுவரெலியா மாநகரஅவையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே, எமது  காப்புறுதி   (எல்.ஐ.சி.) நிறுவனத்தின்  முதன்மை நிறைவேற்று அதிகாரி  சே.சென், பொது முகாமையாளர் அரவிந்தர் சிங்கு, பாராளுமன்ற  மாகாணஅவை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

  மாணவர்களை ஊக்குவிக்கின்ற அதேவேளை 91 பாடசாலை அதிபர்களுக்கும்  சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கல்வி வலயங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

[படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam