மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பிறந்த நாள்

  மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன்,   ஆடி 17, 2047 / ஆகத்து 01, 2016, அன்று (01) தன் 64ஆவது பிறந்த நாளை ஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா நம்முயிர்காப்போம்(எசு..ஓ.எசு.) சிறார்  ஊரில் சிறுவர்களுடன் கொண்டாடினார். (படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்)

644 மாணவர்கள் சிறப்பிப்பு – நுவரெலியா

க.பொ.த  இயல்புத்தரத் தேர்வில்  5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள்  சிறப்பிப்பு  மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு   இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது.   மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின்  ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது….

சின்னம் அணிவித்தலும் நீர் வழங்கலும்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பாடசாலை மாணவர்களுக்குச் சின்னம் அணிவித்தலும் பாடசாலைக்கான  நீர்  வழங்கலும்       நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர்  வழங்கல் திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்குக் கையளித்தல் ஆகிய நிகழ்வு சித்திரை 26, 2047 / மே 09,.2016  அன்று   மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.  இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள்,…

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

இராமாயணப் பூமி இலங்கை! – வே.இராதாகிருட்டிணன்

இராமாயணப் பூமி இலங்கை!   “சிவபெருமானின் ஐந்து திருத்தலங்களைக் கொண்டிருப்பதால் இலங்கையைச் சிவபூமி எனச் சிறப்பிக்கிறார்கள். ஆனால், இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதால் இராமாயண பூமி எனச் சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இராமாயண பூமியே என்பதை ஆண்டுதோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கம்பனுக்கு விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றது என என் மனதுக்குப் படுகின்றது” எனக் கூறுகின்றார் கல்வி அமைச்சரும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின்…

நுவரெலியாவில் இளவேனில் இசைவிழா

  எதிர்வரும் நுவரெலியா  இளவேனில் காலத்தை முன்னிட்டுத் தென்னிந்தியாவின்   புகழ்மிகு இசைக்குழுவான ஆசான்(ஈனோக்கு) இன்பராகம் (Enoch Rhythms) இசைக்குழுவினரின் தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் இன்பஇராகங்கள் இசை நிகழ்ச்சி  சித்திரை 03, 2047 / 16.04.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா  திடலில்   நடைபெறவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நுவரெலியா மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே முன்னிலையில் ஈனோக்குஇசைக்குழுவின் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. ஆசான் (ஈனோக்கு) இன்பராகம் குழுவினரின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு நாளான சித்திரை 01, 2047 / 14.04.2016 அன்று …