image-50509

சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 371. accidentalதற்செயலான எதிர்பாராத; தற்செயலாக   தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை.372. accidental consequencesஎதிர்பாரா விளைவுகள்   எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது.373. accidental deathதற்செயலான மரணம்; நேர்ச்சி  மரணம்   எதிர்பாராமல் அல்லது ...
image-50541

உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-57 திருப்பெருந்துறை மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத்தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தைமுடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார்.எல்லாரிடமும் விடை பெற்று அவர் (1873 திசம்பர்) புறப்பட்டார்.மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சிலமாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் ...
image-50451

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 20 : முடிவுரை

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு-தொடர்ச்சி) தமிழர் வீரம் முடிவுரை விழுமிய வீரம்'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் ...
image-50460

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ?

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம் -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 5. பெருமை என்பது கெடுமோ? கன்னித் தமிழ் நாட்டில் கடல் வளம் கொழிக்கும் கவின் மிக்கது அந்நாடு. இயற்கை அன்னை அளித்த அரிய செல்வமாய் உப்பு, சிறு சிறு குன்றுகள் போல் ஆங்குக் குளித்து கிடக்கும் உப்பை உள்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கும் ...
image-50505

சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 361. Accident  நேர்ச்சி   எதிர்பாரா விளைவு   விபத்து; தற்செயல் நேர்வு   accidēns என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிகழ்தல்/நேருதல்.  எனவே, நேர் பொருளாக நேர்ச்சி என்கின்றனர். எதிர்பாரா நேர்வைக் குறிப்பதால், எதிர்பாரா நேர்ச்சி என்பர். இருப்பினும் வழக்கத்தில் விபத்து ...
image-50481

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை - தொடர்ச்சி) பூங்கொடி மூதாட்டி தன் வரலாறுரைத்தல் வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்;‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச்செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும்புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப்புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன்,நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும்அல்லும் பகலும் செல்லும் சிதலும்சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சியகுறைபடும் ...
image-50502

சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 351. Accession registerஅணுகல் பதிவேடு   இதனை அருங்காட்சியக அணுகல் பதிவேடு, நூலக அணுகல் பதிவேடு என இரண்டாகக் குறிக்கலாம்.    அருங்காட்சியகத்திலுள்ள நிலையான காட்சியகப் பொருள்களின் பதிவுகளை மேற்கொள்வதற்குரிய பதிவேடு.   நூலகத்தில் உள்ள புத்தகங்கள், ஒலிஇழை, ஒளிஇழை முதலான பல்வேடு ...
image-50432

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ - தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 201-215 201.       திருச்சிறு புலியூர் உலா 1951 குறிப்புரை : கி. இராமாநுசையங்கார்      202.       மறைமலையடிகள் - புலவர் அரசு  1951 203.       கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு - அ. அருளம்பலம்      1952 204.       ...
image-50609

பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2; இலக்குவனார் திருவள்ளுவன்

(பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½ - தொடர்ச்சி) முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2 மக்கள், மன்பதை, குடும்பம், அன்பு,  விருப்பு-வெறுப்பு, நட்பு, வானகம்-வையகம்,  அண்டம், இயற்கை, அரசு, போர், அழுக்காறு, நன்னெறி, அறம், ஒழுக்கம், அரசாண்மை, அறிவு, வாழ்க்கை,  பற்று, காலம், மொழி, பொருளியல்,  அரசியல், உறவு, வலியறிதல், பொறுமை, பணிவு, எளிய ...
image-50496

சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 341. Access, directநேரடி அணுகல்   மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு.342. Access, open court to Which the public may haveமக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு.   கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை ...
image-50600

தேர்தல் முடிவுகளின் தாக்கம்! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி

முற்றம் இணையத் தொலைக்காட்சி தேர்தல் முடிவுகளின் தாக்கம் இலக்குவனார் திருவள்ளுவன் உடன் விசவனூர் வே. தளபதி உரையாடல் https://www.youtube.com/embed/FIwvPXrSk4g (https://www.youtube.com/watch?v=FIwvPXrSk4g)
image-50538

உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 90 : அத்தியாயம்-55 : சிறு பிரயாணங்கள்-தொடரச்சி) என் சரித்திரம்நான் இயற்றிய பாடல்கள் தஞ்சை மார்சல் கல்லூரி தமிழ்ப்பண்டிதரும் என் ஆசிரியருடைய மாணாக்கருமாகிய ஐயாசாமிப்பிள்ளையென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளையென்பவரும் வேறு சிலரும் விரும்பியபடி ஆசிரியர் தஞ்சை சென்று அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தார். அக்காலத்தில் நான் அவருடைய உத்தரவின்படியே உத்தமதானபுரம் சென்று என் தாய் ...