( தமிழ்ச்சொல்லாக்கம் 639- 647தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 648-653
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
648. வசனம் - உரை நடை
ரசவாதிகள் - பொன் செய்வோர்
649. காபிரைட் - உரிமை
நூல் : மதிமோச விளக்கம் (1929) நான்காம் பதிப்பு
நூலாசிரியர் : தூசி. இரா ச கோபால பூபதி பக்கம் : 4 நான்காம் பதிப்பின் முன்னுரை
எழுதியவர் : நா. முனிசாமி முதலியார் ...